ஊழல் வழக்குகளில் 678 வழக்குகள் சிபிஐ விசாரணையில் இருப்பதாகவும், அவற்றில் 25 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளதாகவும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 2019ம் ஆண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட ஆண்டறிக்கையில், பதிவு செய்யப்பட்ட 6,226 வழக்குகளில் 182 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாமதங்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு தடையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரித்தாலும், அந்த அமைப்பைச் சேர்ந்த 74 துறை ஊழியர்கள் மீதும் வழக்குகள் உள்ளதாகவும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.