செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கஞ்சா பழக்கத்தால் விபரீதம் : விமானம் பிடித்து வந்து வழிப்பறி... திண்டுக்கல்லில் பிடிபட்ட நாக்பூர் பாக்ஸிங் வீரர்!

Sep 28, 2020 12:53:54 PM

வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வழிப்பறி கும்பலோடு சேர்ந்து கொள்ளையனாக மாறிய தங்கப்பதம் வென்ற பாக்ஸிங் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காமலாபுரம்-பள்ளபட்டி பகுதி இடையே இருசக்கர வாகனங்களில் வருபவர்களை குறி வைத்து 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனங்கள், செல்போன்களை பறித்து செல்வது வாடிக்கையாக இருந்தது.

இது தொடர்பாக , அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார்கள் உள்ளன. அதே போல, வத்தலக்குண்டு-நிலக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனங்கள், நகைகள் கத்தியைக் காட்டி இந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக , வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர் வழிப்பறிகளையடுத்து நிலக்கோட்டை டி.எஸ்.பி உத்தரவையடுத்து, சார்பு ஆய்வாளர் கண்ணா காந்தி தலைமையிலான தனிப்படை வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடி வந்தது. தொடர் தேடுதலுக்கு பிறகு வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கதிரேசபிரபு , பாலமுருகன் , அரசராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மைக்ரோ பயாலஜி பட்டதாரி ஆவார். இவர், நாக்பூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்., தேசிய அளவில் பாக்ஸிங் போட்டியில் பாலமுருகன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கொரோனோ தொற்று காரணமாக குல்லிசெட்டிபட்டிக்கு திரும்பிய பாலமுருகன் கஞ்சா பழக்கத்து அடிமையாகியுள்ளார். இதனால், நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா வாங்க தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில்தெரிய வந்தது.

திண்டுக்கல் பகுதியில் திருடும் இரு சக்கர வாகனம் ஒன்றை பால முருகன் 36 மணி நேரத்தில் நாக்பூருக்கு ஓட்டி சென்று அங்கு மறைத்து வைத்திருப்பதும் விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, நாக்பூரிலிருந்து விமானத்தில் ஊருக்கு திரும்பி வந்த பாலமுருகள் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான்.

பிடிபட்டவர்களிடத்திலிருந்து செல்போன்கள், ஒன்றரை பவுன் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பாக்ஸிங் வீரர் பாலமுருகள் உள்ளிட்ட மூவரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


Advertisement
போலி பத்திரம் வைத்து நில மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்..
புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாளையொட்டி வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள்..
கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் - 2 பேர் கைது
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement