மறைவால் சத்தம் இல்லாத தனிமையை தேடிச்சென்ற பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் 90 களில் இளையதலைமுறை நாயகர்களுக்கும் பொருந்துகின்ற வசீகர குரலால் மனதை மயக்கும் பாடல்களை பாடியவர்...
90 களில் தமிழ் சினிமாவில் காதல் கோட்டைகட்டிய அஜீத் குமாருக்கு எஸ்.பி.பி.யின் குரல் மிகவும் பொருந்தி போனது
அமர்களம் படத்தில் பரத்வாஜ் இசையில் 3 நிமிடத்திற்கு மேல் மூச்சை பிடித்து பாடி சத்தம் இல்லா தனிமை தேடும் ஆதங்கத்தை அஜீத் மூலம் ரசிகர்களுக்கு உணர்வு பூர்வமாக கடத்தி இருப்பார் எஸ்.பி.பி
விஜய் நடித்த தேவா படத்தில் தனது மெலடி குரலால் கடிதம் எழுதி காதலுக்கு மரியாதை செய்தவர் எஸ்.பி.பி
பிரியமுடன் படத்தில் பாரதி கண்ணாம்மா என்று காதலை உணர்ச்சி பூர்வமாக பாடி உருகியவர்
இன்னமும் காதலியை எதிர்பார்த்து காலமெல்லாம் காத்திருக்கும் 90 கிட்ஸ் களுக்கு அன்றே எஸ்.பி.பி பாடிய நடிகர் விஜய்யின் இந்த பாடல் இன்றும் தேசிய கீதம் தான்
காதல் தோல்வியுற்ற 90 கிட்ஸ்களுக்கு தனது பாடல்களால் மருந்திட்டு காதல் காயங்களை ஆற்றியவர்
எழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்காக காதல் சோகத்தை உருகும் குரலால் மனதிற்குள் இறக்கி 2k கிட்ஸ்களின் காதல் வலியையும் மறக்கடித்தவர் எஸ்.பி.பி
ரஜினி பாணியிலான நாயகர்களின் முதல் பாடலை அஜீத்குமாருக்காக பாடி அசத்திய எஸ்.பி.பி, அஜீத்துக்கு தல என பெயர் கொடுத்த தீனா படத்தில் தனது கந்தக குரலால் பற்ற வைத்த வத்திக்குச்சி திரை ரசிகர்களை உற்சாக ஆட்டம் போடவைத்து அஜீத்தை ஆக்சன் நாயகன் என்ற சிம்மாசனத்தில் அமர்களமாய் அமரச்செய்தது
விஜய்யின் ஜில்லாவில் மோகன்லாலுக்கு பாட்டு கட்டி தளபதி ரசிகர்களையும் திரையரங்கில் தரமான ஆட்டம் போட வைத்தவர் எஸ்.பி.பி
50 வருட திரையிசை பயணத்தில் அன்றைய தலைமுறை இன்றைய தலைமுறை என்றில்லாமல் என்றைய தலைமுறைகளையும் மகிழ்வித்து தனது பாடல்களால் தாலாட்டும் எஸ்.பி.பி திரை இசை ரசிகர்களின் தாய்..!