செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்... மருத்துவமனை முன்பு போலீஸ் குவிப்பு

Sep 25, 2020 12:26:28 PM

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  

மொழிகளை கடந்து பல லட்சக் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை அமைந்த கரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி உடல்நிலை மோசம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று நீங்கியதாக கடந்த 7ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. எஸ்பிபி உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதோடு, மகன் எஸ்பிபி சரணுடன் இணைந்து கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்ப்பதாகவும், பிசியோதெரபி பயிற்சி அளிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் எஸ்.பி.பி.யின் உடல்நிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நேற்று எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்று எஸ்பிபி உடல்நிலை குறித்து  விசாரித்து அறிந்தார்.

கோமா நிலையில், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, எஸ்பிபி சரண், மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள செய்தி அறிந்து, இயக்குநர் பாரதிராஜா எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்தார். எஸ்பிபி-யின் மனைவி சாவித்திரி, மகள் பல்லவி ஆகியோரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் உள்ளனர்.


Advertisement
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement