பார்சல்களை கொண்டு செல்ல ரயில்களில் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில், பயணியர் ரயிலின், சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல, 120 நாட்களுக்கு முன்பிருந்து , முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
பயணியர் ரயில்களில், 8 டன் வரையும், பார்சல் ரயில்களில், 24 டன் வரையும் பார்சல்கள் ஏற்றிச் செல்லலாம் என்றும், முன்பதிவுக்கு, 10 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு, 72 மணி நேரத்திற்கு முன், மீதமுள்ள, 90 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், 72 மணி நேரத்துக்கு முன், முன்பதிவை ரத்து செய்தால், 50 சதவீதம் கட்டணம் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடர்பான தகவல்களுக்கு, 139 என்ற, தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.