தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு கருத்துக் கேட்கும் கூட்டம் தொடங்கியது.
மத்திய அரசு தயாரித்துள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து ருத்துக்களைக் கேட்க உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், தனித்தனி வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உயர் கல்வித் துறைச் செயலாளர் தலைமையிலான வல்லுநர் குழு 13 பல்கலைக்கழகத் துணை வேந்தர்களிடம் காணொலியில் கலந்துரையாடியது.
அப்போது மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் என ஒரு பல்கலைக்கழகத்திற்கு 25 பேரிடம் கருத்துக் கேட்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இணைய வழியில் கருத்துக் கேட்கும் கூட்டம் தொடங்கியது.