அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் தொடங்கின.
முதன் முறையாக ஆன்லைன் முறையில் நடைபெறும் இத்தேர்வு ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும். இதற்கேற்றவாறு கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் 4 சுற்றுகளாக, காலை இரு அமர்வுகள், பிற்பகலில் 2 அமர்வுகள் என, வரும் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
நான்கு விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்யும் வகையில், மல்டிபிள் ஆப்சன் (MCQ) முறையில் கேள்வித்தாள் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்களை கண்காணிப்பதற்கு வசதியாக, வெப் கேமிரா அல்லது செல்போன் முன்பக்க கேமிரா முன்னிலையில் மாணவர்கள் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.