புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை நாளை ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது.
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை நாளை ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது. இதில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்கலாம் என்று உயர்கல்வித்துறை விடுத்துள்ள செய்திய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.