கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதியில் எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் தொடர்கிறது.
திருப்புவனத்தை அடுத்த கீழடியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடைபெறுகிறது.
அகரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 13 அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று வரை கூடுதலாக குழிகள் தோண்டியபோது மேலும் கூடுதலாக 4 அடுக்குகள் கொண்ட உறை இருப்பது தெரிய வந்தது.
இந்த பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு வருகிற 30-ந்தேதி வரை தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவு பெறுமா அல்லது அனுமதி காலம் நீட்டிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.