தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் 11 சதவீதமாக உள்ளதை 3 சதவீதமாகக் குறைக்க அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினால் பத்திர பதிவு, முத்திரை வரி, ஜி.எஸ்.டி வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை சேர்த்து 38 லட்ச ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ள நிலையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் வீடுகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் 21 நாட்களுக்குள் அப்ருவல் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கேட்டுக் கொண்டவர்கள் கட்டுமானப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியினை 5 சதவீதமாக்கவும், ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 6ஆயிரம் கோடி நிலுவைத் தொகையினை வழங்கவும் கோரியுள்ளனர்.