தமிழகத்தில் இறுதி செமஸ்டர் மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுத பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அனுமதித்துள்ள நிலையில், விடைத்தாள்களை அனுப்பி வைப்பதில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
சர்வர் கோளாறு காரணமாக விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யமுடிவிடைத்தாள்களை அனுப்ப மாணவர்கள் சிரமம்!வதில்லை என்றும், விரைவு தபாலில் அனுப்ப சென்றாலும் நேரம் கருதி 2 மணிக்கு மேல் தபாலை ஏற்க மறுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேர்வு எழுதிய தினமே விடைத்தாள்களை அனுப்பி வைக்க பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளதால், அனுப்ப முடியாமல் அச்சமடைந்துள்ள மாணவர்கள், விடைத்தாள்களை அனுப்பி வைக்க கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.