செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அப்பாவி சிறுவன் ஆன்லைன் கல்விக்காக ஏக்கம்.... திருடனாக மாற்றிய இளைஞர்கள்! - திருத்திய போலீஸ் அதிகாரி

Sep 21, 2020 01:14:15 PM

ன்லைன் கல்வி கற்க திருடனாக பாதை மாறிய சிறுவனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து வழி நடத்திய காவல் பெண் ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8 - ஆம் வகுப்பு படித்து வந்தான். படிப்பில் ஆர்வம் கொண்ட ரஞ்சன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். கொரோனா காரணமாக தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஆன்ட்ராய்ட் செல்போன் இல்லாத காரணத்தினால், பாடங்களைப் படிக்க முடியாமல் சிறுவன் சிரமப்பட்டு வந்துள்ளான்.

இதனால், தன் வீட்டின் அருகேயுள்ள இளைஞர்களிடத்தில், பழைய செல்போன் தாருங்கள் என்று கேட்டிருக்கிறான். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றுமு ராஜி என்பவரும் சேர்ந்து, 'எங்களுடன் வா செல்போன் வாங்கித் தருகிறேன்' என சிறுவனை திருவொற்றியூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, கான்கார் பகுதி மேம்பாலம் அருகே லாரி ஒட்டுனரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர் .

இதனைக் கண்ட பொதுமக்கள் இளைஞர்களை துரத்தி உள்ளனர். இளைஞர்கள் இருவரும் தப்பிச் சென்று விட சிறுவன் மட்டும் சிக்கிக் கொண்டுள்ளான். பிடிபட்ட சிறுவனை பொதுமக்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சிறுவனிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டார்.

ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் திருட முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனுக்கு ரூ. 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுக்க திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி முன்வந்தார். சிறுவனின் மனநிலையை மாற்றும் விதமாக அவனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து பாடத்தில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் புவனேஸ்வரிக்கு  சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டை தெரிவித்துள்ளார்.

சிறுவனை திருட்டில் ஈடுபட வைத்த மணிகண்டன் மற்றும் ராஜி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

class="twitter-tweet">

அப்பாவி சிறுவன் ஆன்லைன் கல்விக்காக ஏக்கம்.... திருடனாக மாற்றிய இளைஞர்கள்! - திருத்திய போலீஸ் அதிகாரி#onlineeducation #cellphone #coronahttps://t.co/RNGFh8sUti

— Polimer News (@polimernews) September 21, 2020


Advertisement
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு

Advertisement
Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..


Advertisement