கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் மாதிரி தேர்வுகளை அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டுமென அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்-லைன் மூலம் இறுதி செமஸ்டர் தேர்வு, வருகிற 24 ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக, மாதிரி தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் 30 சதவீதம் பேர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தங்களால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என புகார் தெரிவித்திருந்தனர்.
முதல் முறையாக செமஸ்டர் தேர்வு ஆன்லைன் முறையில் நடப்பதால், இதில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. எனவே, மாணவர்களின் பதற்றத்தை போக்கி, நம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகத்திற்கு, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.