தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் பேசிய அவர், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
மேலும் விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார். ஆறுமாதத்தில் விடியல் பிறக்கிறது என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதற்கு பதில் அளித்த அவர், அது பகல் கனவாகவே முடியும் என்று தெரிவித்தார்.