மொழியை அடிப்படையாக வைத்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவில், தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற முழக்கங்களுடன் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற முகமூடியை அணிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் அசாதாரண நிலையை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருவதாகவும் நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டுள்ளார். மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி கிருபாகரன், மொழிப் பேரினவாதத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது எனவும் கூறினார்.
இந்த கருத்துகள் வழக்கில் தொடர்பில்லாதது என்பதால் அவற்றுடன் தான் ஒத்துபோகவில்லை என மற்றொரு நீதிபதி ஹேமலதா கூறியுள்ளார்.