தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வடகடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தாய்லாந்து நிலப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் நௌல் (Noul) புயலானது வலுவிழந்து காற்றுழத்த தாழ்வு பகுதியாக நாளை வடகிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர இருப்பதாகவும், இது மேலும் காற்றுழத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்குவங்க கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.