தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், தன் மகன்கதிர் ஆனந்துடன், மாகதேவமலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து, ஆசி பெற்ற போது, தமிழகத்தின் உச்சப்பதவியில் துரைமுருகன் அமர்வார் என்று ஆசி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் போது, விபூதி சாமியார் கூறியபடியே துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அன்பழகன் மறைவுக்கு பின், துரைமுருகன் தற்போது தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, துரைமுருகனும் மகன் கதிர் ஆனந்தும் செப்டம்பர் 17- ஆம் தேதி இரவு மாகதேவமலை விபூதி சாமியாரை சந்தித்தனர்.
விபூதி சாமியார் ஆள் உயர மாலையை துரைமுருகனுக்கு அணிவித்து வரவேற்றார். அப்போது, துரைமுருகனுக்கு தமிழகத்தில் உச்சப்பதவி கிடைக்கும் என்று வாழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலையில் மகாதேவ மலை உள்ளது. இந்த மலையில் இருக்கும் ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தரை துரைமுருகனுக்கு பல ஆண்டுகளாக பழக்கம். எல்லோரையும் வாடா போடா என்று அழைப்பது இந்த சித்தரின் வழக்கம்.
வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே குளிப்பதால் பார்ப்பதற்கே பயங்கரமாக விபூதி சாமியார் காட்சியளிப்பார். இந்த சித்தரைத் தேடிதான் துரைமுருகன் தன் மகன் கதிர் ஆனந்தோடு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் . ‘ஐய்யா... நீங்க சொன்னதைப் போலவே என் பையனும் தேர்தல்ல ஜெயிச்சுட்டான். நானும் பொதுச் செயலாளர் ஆயிட்டேன் '' என்று துரைமுருகனை சொல்ல வாயார வாழ்த்தினாராம் அந்த சித்தர்.
துரைமுருகன் தி.மு.க ஆட்சி அதிகாரத்தில், 9 முறை எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று முறை அமைச்சர் பதவியும் வகித்துள்ளார்.