தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இன்று செயல்படாது என்று உணவுத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரார்களுக்கு வீடு தோறும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை நாள்களான ஜூலை 10, ஆகஸ்ட் 7 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் கடைகள் அனைத்தும் செயல்பட்டன.
இதற்கு பதிலாக, நவம்பர் மாதம் வரை மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.