சென்னை தாம்பரம் அருகே ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவது குறித்து நோட்டீஸ் அளிக்க வந்த அதிகாரிகளை பணி செய்யவிடாமல் முற்றுகையிட்டு அப்பகுதியினர் வாக்குவாதம் செய்தனர்.
சிட்லபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணகி தெரு, பெரிய தெரு, ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் ஏரி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவற்றை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், சம்மந்தப்பட்ட கட்டிடங்களில் ஸ்டிக்கர்களையும் ஒட்ட முயன்றனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது எனக் கூறி அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.