நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாகவும், காணொலி மூலமாக 42,233 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும், கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யா தெரிவித்த விமர்சனம் அவசியமில்லாத ஒன்று என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.