தமிழகத்தில் பாடத் திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் குருமந்தூர், நம்பியூர் பகுதியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தும், சத்துணவு கூடங்களுக்கு உபகரணங்களையும் வழங்கியும் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தபிறகே, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
நீட் தேர்வில் 90 சதவீத கேள்விகள், மாநில பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டதாகவும், இதுபோல எத்தனை போட்டித் தேர்வு வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்