தூத்துக்குடியை சேர்ந்த 5 பேர், பாக்கு மட்டையை கொண்டு தட்டுத் தயாரித்து பிற திருநங்கைகளுக்கு தொழில் முனைவில் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
பியூட்டி, ஆர்த்தி உள்ளிட்ட 5 திருநங்கைகள் சேர்ந்து மகளிர் குழு ஆரம்பித்ததுடன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து தாங்கள் தொழில் துவங்கி நடத்த உதவி கோரினர்.
இதையடுத்து தூத்துக்குடி ஒன்றிய அலுவலகம் அருகே அவர்களுக்கு பாக்கு மர தட்டு உற்பத்தி நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதன்மூலம் சிறிய வகை தட்டுகளை தயாரித்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விற்பனை செய்கின்றனர்.