சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாதல், மாவட்டங்கள் வாரியாக பணிகளைப் பிரித்தல் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.