கோவையில் செங்கல் சூளை உரிமையாளர்களின் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
கோவை சின்னதடாகம், பெரியதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் இருந்து விற்கப்படும் செங்கற்களுக்கு உரிய சரக்கு சேவை வரியைச் செலுத்துவதில்லை எனப் புகார்கள் வந்தன.
இதையடுத்து சோமையனூர், சின்னதடாகம், பெரியதடாகம், சாய்பாபா கோவில், கவுண்டம்பாளையம் பகுதிகளில் மொத்தம் 25 இடங்களில் ஜி.எஸ்.டி. துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வரி செலுத்தாமல் முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர்களிடம் அபராதத்துடன் ஜி.எஸ்.டி. வரி பெறப்படும் எனக் கூறப்படுகிறது.