வேளாண் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக நபார்டு வங்கித் தலைவர் சிந்தாலா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்த நபார்டு வங்கியும், பொதுத்துறை வங்கிகளும், விவசாய குழுக்கள், கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்க உள்ளன.
இந்நிலையில் தமிழகம் வந்துள்ள நபார்டு வங்கித் தலைவர் சிந்தாலா சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கலை அதிகரிப்பது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவது, சுய உதவிக் குழுக்களை டிஜிட்டல் மயமாக்குவது, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களைக் கணினி மயமாக்குவது ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.