திருச்சி - காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப் பட்டு, பொன்மலை ஜி - கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் இயங்கி வருகிறது.
இந்த சூழலில், காந்தி மார்க் கெட்டை நிரந்தரமாக மூடக்கோரியும், கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்கக் கோரியும், திருச்சி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக் கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அக்டோபர் 13 ஆம் தேதி வரை காந்தி மார்க்கெட்டை திறப்பதற்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.