ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தை, அரசு நினைவில்லமாக்கும், சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கல் செய்தார். ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அவசரச் சட்டம் கடந்த மே மாதம் 21ஆம் தேதி ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, வேதா நிலையம் அமைந்துள்ள, நிலம், கட்டிடம் உள்ளிட்டவை மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டதாக , கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக்க வழிவகை செய்திடும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.