உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, உழவர் உதவித் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துறை அலுவலர்கள் 8 பேர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த ஊழியர்கள் 87 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போலிப் பயனாளிகள் முறைகேடாகப் பெற்ற தொகையைப் பறிமுதல் செய்து அரசு கணக்கில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.