கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அங்கு வேட்பாளரை நிறுத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாரின் உருவச் சிலைக்குத் தமிழக பாஜக தலைவர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக போட்டியிட்டதை சுட்டிக்காட்டினார்.