திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையின் ராஜ வாய்க்காலில் வரும் தண்ணீரை குடகனாற்றில் மாற்றி திறந்து விட்டதை கண்டித்து சித்தையன் கோட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடகனாற்று பாசன விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி, 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் சித்தையன்கோட்டையில் உள்ள சுமார் 60 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதி விவசாயிகள், கருப்புக் கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.