பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினத்தையொட்டி சிறப்பாகப் பணி செய்த காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல் ரேகைப் பிரிவில் 2பேர், தடய அறிவியல் துறையில் 2 பேர் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் மானியத்தொகை அளிக்கப்படும். மேலும் தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி உள்ளிட்ட இருவருக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ரூ.5லட்சம் பண வெகுமதியும் வழங்கப்படுகிறது.