திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப் போராட்டத்தை சந்தித்தாவது நீட் தேர்வை நீக்கும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மோதிலால் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அவர் வழங்கினார்.