தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரதமரின் உழவர் உதவித்தொகைத் திட்டத்தில் போலிப் பயனாளிகளைச் சேர்த்து 110 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்புள்ள அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், போலிப் பயனாளிகளுக்குச் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பிரதமரின் உழவர் உதவித் தொகைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதை நிறுத்தி வைக்கும்படி வேளாண்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது வரை மாவட்ட அளவில் பயனாளிகள் சேர்க்கை நடைபெற்று வந்தது நிறுத்தப்பட்டு, இனி மாநில அளவில் பயனாளிகள் சேர்க்கை நடைபெறும் என வேளாண்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.