தமிழகம் கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக நாளை கேரளாவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இருமாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்த குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தையில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை கேரளாவில் நடைபெறவுள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தையில், பங்கேற்க தமிழக குழு கேரளா சென்றுள்ளது.
நாளைய பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு, கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சிறுவாணி அணை பிரச்சனை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.