தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த போது இதனை அவர் தெரிவித்தார்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் 836 கோடி ரூபாய் மதிப்பில் 398 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,508 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். 6,427 பயனாளிகளுக்கு 15 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.