விளையாட்டு மைதானங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விளையாட்டு மைதானம் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் எனவும், மைதானத்துக்குள் நுழையும் வீரர்கள் கைகளை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும், பெரிய மைதானமாக இருக்கும்பட்சத்தில், பகுதி வாரியாக அனுமதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மைதானத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.