கோவை அருகே 2 மாதங்களாக வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை உடல்நலம் குன்றி உயிரிழந்தது.
அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக கேரள வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயந்து வந்ததால் யானைக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே 3 குழுக்களை அமைத்து கோவை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். மருந்து கலந்த உணவை யானை எடுத்துக் கொண்டாலும், நேற்று மாலை உடல்நலம் மிகவும் மோசமாகி நகர முடியாமல் சோலையூர் அருகே மரப்பாலம் என்ற இடத்தில் படுத்துவிட்ட யானை, இன்று காலை உயிரிழந்தது.