திமுக பொதுக்குழு கூட்டம் முதன்முறையாக காணொலி காட்சி வாயிலாக, இன்று நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 3500க்கும் மேற்பட்டோர் காணொலி மூலம் பங்கேற்க உள்ளனர். இதற்காக மாவட்ட வாரியாக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை சமூக இடைவெளியுடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கபப்ட்ட உறுப்பினர்கள் காலை 9 மணிக்குள் அரங்கிற்குள் கையொப்பமிட்டு செல்ல வேண்டும் எனவும், செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது பொதுக்குழுவில் அறிவிக்கப்படும். மத்திய- மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.