40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூலித்ததாக 108 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, 40 சதத்திற்கும் மேல் கல்விக் கட்டணம் வசூலித்த 34 தனியார் பள்ளிகள் குறித்த பட்டியலை பள்ளி கல்வித்துறை நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் 74 தனியார் பள்ளிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், அதிக கட்டண வசூல் உறுதியானால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.