சீனாவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் மீண்டும் தங்களது கல்லூரிகளுக்கு திரும்புவது மற்றும் படிப்பை தொடர்வது குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ளுமாறு சீன அரசு கூறியுள்ளது.
சீனாவில் சுமார் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வந்தனர். இவர்களில் 21 ஆயிரம் பேர் எம்பிபிஎஸ் படிப்பை மேற்கொண்டு வந்தனர். சீன புத்தாண்டு விடுமுறைக்காக இந்தியா வந்த இவர்கள், கொரோனா பரவலை தொடர்ந்து சீனா திரும்ப முடியாமல் உள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி இல்லை என சீன அரசும் அறிவித்துள்ளது. எனவே, ஆன்லைன் வாயிலாக படிப்பை தொடர்வது குறித்து பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பெய்ஜிங் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.