மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல், நியாயமான - தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திட வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு விவகாரத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோரின் முரண்பாடான - குழப்பங்கள் நிறைந்த அறிக்கைகள் வெளியாகி, மாணவர்களைப் பதற்றத்திற்குள்ளாக்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பாவுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் கடிதம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.