பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா உறுதியானதால், கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் கொரோனாவிலிருந்து நேற்று மீண்டார்.
இருப்பினும் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் நுரையீரல் கடுமையாக பாதிப்பு அடைந்து இருப்பதால் தமிழக சுகாதாரத்துறையின் உறுப்பு மாற்று பிரிவில் உறுப்புக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.