தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப் படுவதாக சென்னை - G.S.T அலுவலக இந்தி மொழி பிரிவின் உதவி ஆணையர் பாலமுருகன் , குற்றஞ் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவருக்கு பாலமுருகன் எழுதி உள்ள கடிதத்தில், இந்தி மொழி பிரிவில், இந்தி தெரியாதவர்களை பணியில் அமர்த்துவது சரியானது அல்ல என கூறியுள்ளார்.
இந்தியை படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது மட்டும் இந்தி திணிப்பு அல்ல,இந்தியை பரப்ப வேண்டும் என விருப்பம் இல்லாதவர்களை நிர்பந்தம் செய்வதும் மறைமுகமான இந்தி திணிப்பு தான் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, இந்தி பிரிவில், இந்தி மொழி தெரிந்தவர்களை மட்டுமே பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கடிதத்தில் பாலமுருகன்கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தியாவின் பன் முகத்தன்மைக்கு உருவாகி உள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.