தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 925 ஆக அதிகரித் துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 949 பேருக்கும், கோவையில் 524 பேருக்கும், கடலூரில் 398 பேருக்கும், செங்கல்பட்டில் 330 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.