வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.
வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களில் நாட்டிலேயே அதிகமான அளவிற்கு முதலீடு ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
கடந்த 5 மாதங்களில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 ஆயிரத்து 212 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், புதிய மின்னணு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவாகவும் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.