40 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறும் கீரிபள்ளம் ஓடையை தூர்வாரும் பணியை ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், 40 சதவீத கட்டணத்தையே வசூலிக்க வேண்டுமென தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.