மகிழ்வான குடும்பத்தையும், வலுவான நாட்டையும் கட்டமைப்பதில் இல்லத்தரசிகள் முக்கிய பங்கு வகிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சேலத்தில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் காயம் அடைந்த புவனேஷ்வரிக்கு 4 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீடு வழங்க யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதனை உயர்த்தி வழங்க கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இழப்பீடு தொகையை 14 லட்சத்து 7 ஆயிரமாக உயர்த்தியதுடன் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 12 வாரத்தில் வழங்க உத்தரவிட்டது.
இல்லத்தரசிகளின் தலைமையிலான மகிழ்வான குடும்பமே நல்ல சமுதாயத்தை உருவாக்கி, நல்ல நாட்டை கட்டமைக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.