கொரோனா ஊரடங்கால் ரயில் சேவை கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்ட நிலையில், அண்மையில் தமிழகத்தின் கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு வரும் 7ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்பிறகு 4 சிறப்பு ரயில்கள் நேற்று தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்டன. இந்த 13 ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காலை 8 மணி முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் அவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ரயில்வே நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்களிலும் மக்கள் காத்திருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர்.
ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வருவோருக்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.