மதுரை கீழ் சந்தைப்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று அப்பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும், கல்வி திறனை மேம்படுத்தவும் தலைமையாசிரியர் முயற்சியில், ஆசிரியர்கள் மாணவர்கள் வீட்டிற்கே சென்று பாடம் நடத்துகின்றனர். மரத்தடி நிழல், பூங்கா, வீட்டுத் திண்ணைகளை தற்காலிக வகுப்பறைகளாக மாற்றி பாடம் கற்பித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து, கைகளை சுத்தம் செய்ய வைத்து, தனிநபர் இடைவெளியுடன் அமர வைத்து பாடம் கற்று கொடுப்பது மட்டுமில்லாமல், எழுத்து பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, உடற் பயிற்சி ஆகியவற்றையும் கற்று கொடுக்கின்றனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.