பீகார் சட்டமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட 65 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில், கனமழை, கொரோனா பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் இடைத்தேர்தல்தளை தள்ளிவைக்கக் கோரி, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலர்கள் அளித்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.
நவம்பர் 29ஆம் தேதிக்கு முன்னதாக பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், அதே காலகட்டத்தில் இடைத்தேர்தல்களையும் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.